தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியை சேர்ந்த கூலி தொழிலாளி மணிகண்டன், நேற்று முன்தினம் இவரது உறவிணருக்கு உடல் நலம் சரியில்லாததால் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்நோயாளிகள் வார்டில் அட்மிட் செய்தார். கடந்த 2 நாட்களாக மருத்துவமனை வளாகத்தில் இவர் கண்ட காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனையில் ஆங்காங்கே, இரத்தம் உறைந்தும், மருத்துவ கழிவுகள் சிதறியும், அசுத்தமின்றி உள்ளது.
தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனைக்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகளும் அவர்களது உறவிணர்களும் வந்து செல்லும் நிலையில், சுகாதாரமின்றி நோய் தீர்க்கும் மருத்துவமனையே நோய்களின் கூடாரமாக விளங்கி வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.