தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த சோமனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது.35) இவர் இராயக்கோட்டை தீயனைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணியாற்றி வருகிறார். கடந்த 20ம் தேதி காலை 11 மணிக்கு பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
கர்த்தாரஅள்ளி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் இருந்து வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த நந்தகுமாரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெங்களுர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து பாலக்கோடு போலீஸ் ஸ்டேசனில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக