Type Here to Get Search Results !

100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் ரத்ததான விழிப்புணர்வு பேரணி.


100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் ரத்ததான விழிப்புணர்வு பேரணி மை தருமபுரி அறக்கட்டளை மற்றும் மருதம் நெல்லி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக நடைபெற்றது.


வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்யவும், 18 வயது நிபரம்பியவர்கள் வாக்குப்பதிவு செய்வது எப்படி‌ கடமையோ அதேப்போல இரத்ததானம் கொடை வழங்குவதும் கடமையாகும். இதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மை தருமபுரி அறக்கட்டளை மற்றும் மருதம் நெல்லி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் இணைந்து ஆட்சியர் அலுவலகம் முதல் அரசு மருத்துவக்கல்லூரி வரை விழிப்புணர்வு பேரணி நடத்தினர். 



இந்த பேரணிக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பால் பிரின்சிலி ராஜ்குமார் அவர்கள் கலந்து கொண்டார். தருமபுரி அரசு மருத்துவமனை குருதி வங்கி மருத்துவர் கன்யா, மருதம் நெல்லி கல்வி குழுமம் தலைவர் கோவிந்த், ஜெயம் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பரஞ்சோதி, மை தருமபுரி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமூக சேவகர் அருணாசலம், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies