பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாதனூர் ஊராட்சியில் சட்டமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவச்சிலை சிலை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து ஏழு ஆண்டு காலங்களாக போராடிக் கொண்டிருக்கும் அருந்ததியர் சமுதாயம், இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்காத தாசில்தார் ஆர்டிஓ மற்றும் இதர அரசு அதிகாரிகள் என கூறி, அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிப்போம் என்ற கோரிக்கையோடு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அருந்ததியர் சமுதாய கோரிக்கை அண்ணல் அம்பேத்கர் சிலை நிறுவ வேண்டும், வெள்ளி சிலையின் விலை சுமார் 20 லட்சம் அதை நாங்கள் செய்திருக்கிறோம் என்று ஹைகோர்ட்டிலும் மனு தாக்கல் செய்து பரிந்துரை செய்துள்ளோம், ஆனால் அரசு அதிகாரிகள் இதை அனுமதிக்க மறுக்கின்றனர், எனவே வரும் நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என அப்பகுதி மக்கள் கூறினர்.

