மேலும், தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாணவியர்கள் எடுத்துக் கொண்டனர். பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு, தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட மாபெரும் வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி. இ.ஆ.ப., அவர்கள் இன்று (05.04.2024) துவக்கி வைத்து, தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி, தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், முதல்முறை வாக்களர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட முழுவதும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் துண்டு பிரசுரங்கள் வழங்குதல், ஒட்டுவில்லைகளை வழங்குதல், விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி நடத்துதல், தேர்தல் விழிப்புணர்வு சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் இன்றைய தினம் தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தருமபுரி சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட மாபெரும் வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. இம்மனித சங்கிலி நிகழ்ச்சியில் அனைவரும் தேர்தலில் வாக்களிக்கும் நோக்கில் தருமபுரி சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியை சார்ந்த 1600 மாணவிகள் கலந்து கொண்டனர். ”தேர்தலின் பெருமை நாட்டின் பெருமை”, ”நாட்டிற்கான எனது முதல் வாக்கு“, ”விரலுக்கு மையிட்டு நாட்டின் விதியை மாற்றுவோம்”, ”என் வாக்கு விற்பனைக்கு அல்ல” உள்ளிட்ட தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த மனிதச்சங்கிலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பாரதிபுரம் சாலை சந்திப்பு வரை மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நின்று, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். பிரேம குமாரி, துணை முதல்வர்கள் முனைவர். செந்தில்குமார், முனைவர். அம்பிகா, திரு. சிவகலை, வருவாய்த்துறை பணியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

.jpg)