பென்னாகரம் அருகே ஊர் பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு, அடிப்படை வசதி செய்து தராத அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 2 ஏப்ரல், 2024

பென்னாகரம் அருகே ஊர் பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு, அடிப்படை வசதி செய்து தராத அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.


பென்னாகரம் அருகே உள்ள இராம கொண்ட அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சந்தை மேட்டில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊருக்கு சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமின்றி அவதிப்பட்டு வருகின்றனர். அரசு அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 


இதனைத் தொடர்ந்து குடிநீர் வசதி மற்றும் சாலை வசதி செய்து தராத அரசயும் அரசு அதிகாரிகளையும் கண்டித்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக ஊர் எல்லையில் விளம்பர பதாகைகளை நட்டு உள்ளனர். மேலும் நேற்று ஊர் பொதுமக்கள் அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதனைத் தொடர்ந்து ஏரியூர் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தைமேடு பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.