தருமபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து சாலைகளும் (கிராம சாலைகள், ஊராட்சி ஒன்றிய சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் இதர சாலைகள்) மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால் தினந்தோறும் இச்சாலையில் பயணிக்கும் விவசாய பெருமக்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அனைத்து தரப்பு பொதுமக்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
பழுதடைந்த சாலைகளை மேம்படுத்தி சீரமைக்க சட்டமன்றப் பேரவை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் மேற்கண்ட சாலைகளை மேம்படுத்தி சீரமைக்க வலியுறுத்தி இன்று, காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார் காவல்துறை இதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்பொழுது தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் தரையில் அமர்ந்து போராட்டத்தை துவக்கி உள்ளார். இந்தப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.