தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த கதிரம்பட்டி பகுதியில் மகேந்திர மங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கதிரம்பட்டி, மொடக்குபாறை அருகே பாறை மறைவில் நாட்டு துப்பாக்கி ஒன்று இருந்ததை கண்ட போலீசார் அதனை மீட்டனர்.
சமூக விரோதிகள் சிலர் சட்டத்திற்க்கு புறம்பாக விலங்குகளை வேட்டையாட நாட்டு துப்பாக்கிகள் பயன்படுத்த மறைத்து வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.