மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கிய மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்திற்காகவும், தருமபுரி மாவட்ட பொதுமக்களிடையே நெகிழி (பிளாஸ்டிக்) தடை போன்ற சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வுகளை தொடர்ந்து ஏற்படுத்தும் பொருட்டு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள எல்.இ.டி (LED) திரையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்கள் பார்வைக்காக இன்று (06.03.2024) திறந்து வைத்தார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பயன்பாட்டிற்கு தடை விதிக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தினை தொடங்கி வைத்தார்கள். அதன் ஒருபகுதியாக, பொதுமக்களிடையே ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி தடை குறித்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் எல்.இ.டி திரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுப்பட்டுள்ளது. எல்.இ.டி திரையினை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்களால் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.
பொதுமக்கள் நெகிழிப் பைகளைத் தவிர்த்து துணிப்பையை பயன்படுத்துமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவிறுத்தியதோடு, நெகிழி இல்லா தருமபுரி மாவட்டத்தை உருவாக்க பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதிலும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பதிலும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுலவக கூட்டரங்கில் நெகிழி (பிளாஸ்டிக்) தடை மற்றும் மீண்டும் மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற தொடர் ஓட்டத்தில் வெற்றி பெற்ற அரசு பொறியியல் கல்லூரி மாணாக்கர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் இன்று வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் திருமதி.ஆ.நித்யலட்சுமி, உதவிப்பொறியாளர் செல்வி.பா.லாவண்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.மோகன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவர்கள், உதவி பேராசிரியர்/நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் திரு.பரமேஸ்வரன், அரசு பொறியியல் கல்லூரி மாணாக்கர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.