தருமபுரி குமாரசாமிபேட்டை அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோவிலில் மயானக்கொள்ளை பெருவிழா 5 நாட்கள் நடைபெறுகிறது 2ம் நாளான இன்று சக்தி கரகம் எடுத்த்தல்-தீமிதி விழா நடைபெற்றது முன்னதாக தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர் தீக்குண்டத்தில் இருந்துசக்தி கரகம் செண்டை மேளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று அங்காளபரமேஸ்வரி ஆலயம் சென்றடைந்தது.
பின்னர் அங்காளபரமேஸ்வரிக்கு சிறப்பு பூஜைகள் செய்த பின் அலங்கரிக்கப்பட்டு அங்காளபரமேஸ்வரி பக்தர்களுக்கு அருள் பாளித்தார் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அங்காளபரமேஸ்வரி அருள்பெற்றனர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.