தருமபுரி மாவட்டம் பாலக்கோடு எஸ்.பி.ஐ. வங்கி முன்பு வட்டாரதலைவர் தக்காளி கணேசன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு வட்டார தலைவர் ராஜேந்திரன், தெற்கு வட்டார தலைவர் சிலம்பரசன், மாரண்டஅள்ளி நகர தலைவர் பாலபார்கவன் ஆகியோர் ஆர்பாட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தீர்த்தாராமன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கண்டித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மத்தியரசின் தேர்தல் பத்திர முறைகேட்டை மறைக்க முயற்சிக்கும் ஸ்டேட் பேங்க்கை கண்டித்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர துணை தலைவர் பாலாஜி குமார், நகர செயலாளர் ரகமத்துல்லா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் வீரமணி, மாவட்ட துணைத் தலைவர் சண்முகம், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் அன்பழகன், மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பொதுசெயலாளர் பழனியப்பன், வட்டார குழு செயலாளர் செல்வகுமார், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.