தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தின விழா நிகழ்ச்சி தனி வட்டாட்சியர் ரேவதி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தாசில்தார் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் தனி தாசில்தார் ரேவதி கேக் வெட்டி பெண் ஊழியர்களுக்கு ஊட்டினார். அதனை தொடர்ந்து பேசியவர், மகளிர் அனைத்து துறைகளிலும் பங்கெடுத்து வருகின்றனர். ஒவ்வொரு துறையிலும் பெண்கள் சிறந்து தனித்துவத்துடன் விளங்க வேண்டும். ஒரு பெண் முன்னேற்றமே சமுதாயத்தின் உண்மையான முன்னேற்றம் என பேசினார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், சர்வேயர்கள் மற்றும் பணியாளர்கள் திரளாக கலந்து மகளிருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.