Type Here to Get Search Results !

பென்னாகரம் அருகே காந்திநகர் பகுதியில் நிலப்பட்டா கேட்டு நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணிப்போம் பேனர் வைத்து ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டுவன அள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஜெல்மாரம்பட்டி காந்திநகர் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நான்கு தலைமுறைகளாக வசித்து வருவதாகவும் ஜெல்மாரம்பட்டிகாந்திநகர் மருக்காரம்பட்டி பவளந்தூர் மேல்கொட்டாய் எலுமல்மந்தை நாவணம்பட்டி அட்டப்பள்ளம் உப்பலபுரம் சக்கல்நத்தம் முருங்கமரத்தரிசு தும்கல் கோடுபட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடு கட்டி விவசாயம் செய்து வருவதாகவும் இந்த விவசாயநிலத்திற்கு நில பட்டா கேட்டு முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்திலும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும் கிராம நிர்வாக அலுவலகத்திலும் பலமுறை மனு கொடுத்தும் மனு மீது எந்த நடவடிக்கையும் இல்லை என கூறுகின்றனர்.


விவசாயம் செய்ய கிணறு தோண்டுதல், குடிதண்ணீர் வசதி ஏற்படுத்துதல், விவசாயம் செய்ய மின் வசதி பெறுதல், விவசாயம் என்று அரசு வழங்கும் கிசான் உறுப்பினர் அட்டை பெற முடியவில்லை, விவசாயத்திற்கு சொட்டுநீர் பாசன வசதி அரசிடம் உதவி பெற முடியவில்லை, பயிரிடும் விவசாய பயிருக்கு காப்பீடு செலுத்துதல், விவசாயம் செய்ய மின் வசதி பெறுதல் கூட்டுறவு வங்கியில் விவசாய கடன் உதவி பெற முடியவில்லை உள்ளிட்ட எந்த வேலையும் செய்ய முடியவில்லை எங்கள் விவசாயத்திற்கு நில பட்டா இல்லை ஓட்டு போட்டு நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என ஆதங்கத்தை வெளிப்படுத்தினர் மேலும் நடைபெறுகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் என சுமார் 100 க்கும் மேற்பட்டோர் பேனர் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.


இதில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் வட்டாட்சியருமான சுகுமார் பென்னாகரம் காவல் ஆய்வாளர் உமா சங்கர் பவளந்தூர் கிராம நிர்வாக அலுவலர் சங்கர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் அனைத்து விவசாய நிலத்திற்கும் உரிய முயற்சி மேற்கொண்டு பட்டா வழங்குவதாக தெரிவித்தனர்.


இதில் உடன்பாடு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதாக தெரிவித்து கலைந்து சென்றனர் இதனால் நாடாளுமன்றத் தேர்தல் புறக்கணிப்பதாக பேனர் வைத்து ஆர்பாட்டம் செய்த பொதுமக்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies