தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பெரிய தப்பை நெடுஞ்சாலையில் தர்மபுரியில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற அரசு பேருந்தும், ஒசூரிலிருந்து தர்மபுரி நோக்கி வந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் ஓட்டுநர், பெண்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதில் அரசு பேருந்து ஓட்டுநர் காளியப்பன் (வயது.47) டிப்பர் லாரி ஓட்டுநர் மாரிமுத்து (வயது.45) மற்றும் பயணிகள் சீரண்டபுரத்தை சேர்ந்த சாந்தா (வயது. 31), கடகத்தூரை சேர்ந்த சுமதி (வயது.35). பென்னாகரத்தை சேர்ந்த சீனிவாசன் (வயது .55) ஓமலூரை சேர்ந்த காந்திமதி (வயது. 31) உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர், படுகாயமடைந்தனர்.
உடனடியாக அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து மகேந்திர மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
.gif)

