தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமவாய்ப்பு கொள்கை தடையற்ற சூழல் ஏற்படுத்துதல் கொள்கை விளக்க கூட்டம் மற்றும் மாவட்ட துறை அலுவலர்களுக்கு உலகளாவிய அனுகல் தன்மை குறித்த ஒரு நாள் பயிற்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையேற்று, இன்று (12.03.2024) துவக்கி வைத்தார்கள்.
இப்பயிற்சியில் மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்திய நிறுவனங்களான ஸ்ரீரங்கா டிபார்ட்மெண்ட் ஸ்டோர், சதர்ன் ஸ்பின்னர்ஸ் பிராசசர்ஸ் லிமிடெட், எலைட் நிட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு பாரட்டுச்சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். மேலும், இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வேலைவாய்ப்பு கண்டறிந்து அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்க தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் முன் வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அரசு கட்டிடங்கள் மற்றும் தனியார் கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்று வர ஏதுவாக தடையற்ற சூழல் ஏற்படுத்துதல் குறித்து விளக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தொழிலக பாதுகாப்பு (ம) சுகாதாரம் துணை இயக்குநர் திரு.சந்திரமோகன், உதவி இயக்குநர் மாவட்ட திறன் (ம) பயிற்சி திரு.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை துணை ஆய்வாளர் திரு.ஞானசேகரன், பட்டியலிடப்பட்ட அனுகுதல் தனிக்கை முகமை (தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு) தனிக்கையாளர் திரு. சரத்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, பொதுப்பணித்துறை பொறியாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)