பாப்பாரப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாநில ஆறாவது நிதிக் குழு பள்ளி மேம்பாட்டு மானிய நிதியில் ரூ 1.19 கோடி மதிப்பிலான கூடுதல் வகுப்பறைக்கட்டடடம், கழிப்பிட வளாகம் மற்றும் கழிப்பறை பராமரிப்பு பணிகளுக்கு பேரூராட்சி தலைவர் டி.பிருந்தா பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் கல்பனா தனசேகரன், தலைமை ஆசிரியர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரூராட்சி துணை தலைவர் மல்லிகாராஜி, கவுன்சிலர்கள் பூங்குழலி பிரகாஷ், வே.விசுவநாதன், ர.விஜய் ஆனந்த், தர்மலிங்கம் எம்.தமிழ்ச்செல்வி, முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆர்.திருவேங்கடம், திமுக நகர செயலாளர் சண்முகம், மாவட்ட துணை செயலாளர் உமாசங்கர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
.gif)

