Type Here to Get Search Results !

தேர்தல் குறித்த விளம்பரங்கள் ஒளிபரப்புகள் கண்காணிக்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு மையத்தில் தேர்தல் குறித்த விளம்பரங்கள் ஒளிபரப்புகள் கண்காணிக்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024ஐ முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு மையத்தில் தேர்தல் குறித்த விளம்பரங்கள் ஒளிபரப்புகள் கண்காணிக்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (19.03.2024) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.


இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது:- மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பல்நோக்கு கட்டிடத்தில் 24x7 மணிநேரம் செயல்படும் வகையில் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு மையம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.


மேலும், ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு மையத்தில் 24 மணி நேரமும் கண்காணிக்க சுழற்சி முறையில் மூன்று குழுக்கள் அமைத்து கண்காணித்து வருகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு.பிரகாசம், தனி வட்டாட்சியர் (தேர்தல்) திரு.அ. அசோக்குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி உடனிருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies