Type Here to Get Search Results !

தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறை உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறை உள்ளிட்டவற்றை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தருமபுரி பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024ஐ முன்னிட்டு, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறை உள்ளிட்டவற்றை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (19.03.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் முதல் மற்றும் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. தருமபுரி பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தருமபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வருவதின் ஒருபகுதியாக, இன்று தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளையும், தருமபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 162 வாக்குச்சாவடி மையங்களில் அடங்கியுள்ள 308 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் நடைபெறும் நாளன்று வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாகவும், அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சார வசதி, கழிப்பறை வசதி, மாற்றுதிறனாளிகள் மற்றும் வயதானவர்கள் வாக்களிக்க சாய்வுதளம் போன்றவைகள் தயார்நிலையில் இருப்பது குறித்தும், பறக்கும் படை குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்களின் செயல்பாடுகள் குறித்தும் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர், நுகர்பொருள் வாணிபக்கழக பொது மேலாளரிடம் கேட்டறிந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் வைப்பறையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் இன்று ஆய்வு செய்யப்பட்டது என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.


இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், ஓட்டுநர்கள், தமிழ்நாடு மின்பகிர்மான கழக அலுவலர்கள், தீயணைப்புத்துறை அலுவலர்கள், இரயில்வே மற்றும் பி.எஸ்.என்.எல் அலுவலர்கள் தபால் வாக்குகள் செலுத்துவது குறித்து அறிவுரை வழங்கப்பட்டதோடு, வாக்குப்பதிவு நாளன்று தங்களது அலுவலகத்தில் பணியில் உள்ள பணியாளர்கள் 100 சதவிகிதம் வாக்களிப்பதை உறுதிசெய்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்து.


பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை அடுத்து, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தருமபுரி மாவட்ட பொதுத்துறை மற்றும் தனியார்த்துறை வங்கியாளர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் பணபரிவர்த்தனை மற்றும் ஒரே நேரத்தில் அதிகப்படியான தொகைகளை கையாளும் நபர்கள் குறித்து தகவல் அளிக்க வேண்டும். அதேபோல் தொழில் மற்றும் விவசாயம் சார்ந்த பணிகளுக்காக முறையாக கடன்பெறும் நபர்களுக்கு வங்கியிலிருந்து பெறும் தொகைக்கான இரசீதுகளை உடனடியாக வழங்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, பணபரிவத்தனைகளை முறையாக பராமரிப்பதோடு, தேவைப்படும் நேரங்களில் உரிய தகவல்களை வழங்க வேண்டும் எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.


இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் திருமதி.காயத்ரி, திரு.வில்சன் ராஜசேகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு.பிரகாசம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.தனப்பிரியா, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் - பொறுப்பு அலுவலர் திருமதி.தேன்மொழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திருமதி.ஷெர்லி ஏஞ்சலா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.சிவக்குமார், உதவி ஆணையர் (ஆயம்) திருமதி.கே.நர்மதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) திரு.அருண்மொழித்தேவன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies