தர்மபுரி மாவட்டம், ஆட்டுக்காரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் வயது(40) கட்டிட மேஸ்திரியாகும். இவர் சொந்தமாக, ஆட்டுக்காரம்பட்டியில் புதிய வீடு கட்டி வந்துள்ளார். வீடு கட்டுமான பணி முடிந்த பின், வீட்டுமின் இணைப்பு டேரீப்-ஐ மாற்றித்தரக்கோரி, இண்டூர் உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில், பணிபுரியும், மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் சசிகுமாரை அணுகியபோது, டேரீப் மாற்றி தர, வடிவேலுவிடம், அவர் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் தர விரும்பாத வடிவேல், தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொடுத்த ஆலோசனைப்படி, ராசாயணம் தடவிய ரூ.15 ஆயிரம் ரொக்க பணத்தை வடிவேலு, மார்ச்.13 இன்று 11 மணியளவில், இண்டூர் உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும், மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் சசிகுமாரிடம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மாறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கையும் களவுமாக மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் சசிகுமாரை கைது செய்தனர். பின்னர் அவர் வாங்கிய லஞ்சப் பணம் ரூ.15 ஆயிரத்தை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
.gif)


