தருமபுரி மாவட்டம். மாரண்டஅள்ளி தனியார் மண்டபத்தில், பாலக்கோடு மேற்கு ஒன்றிய வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் பாலக்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பி.கே.அன்பழகன் தலைமையில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்திற்க்கு மாவட்ட துணை செயலாளர் ராஜகுமாரி மணிவண்ணன், மாவட்ட பொருளாளர் முருகன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மகேஸ்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளருமான பழனியப்பன் அவர்கள் கலந்து கொண்டு, பாலக்கோடு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் விவரங்கள் தெரு வாரியாக, குடும்பவிவரம், மாற்று திறனாளிகளின் விபரம், தொடர்பான கணக்கெடுக்கும் பணி குறித்து ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வாக்குசாவடி முகவர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை செயலாளர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
.gif)

