தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி 18வார்டுகளில் சுமார் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். வளர்ந்து வரும் நகரங்களில் பாலக்கோடு ஒன்றாகவும் விளங்கிய வருகிறது. இப்பேருந்து நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு அரசு பேருந்து தனியார் பேருந்து என 200க்கும் மேற்பட்ட பேருந்துகளும் 200ஆட்டோகள் என பேருந்து நிலையத்திலிருந்து ஓசூர் பெங்களூர் மைசூர் சென்னை பழனி கோவை தர்மபுரி சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நகர மக்கள் புறநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது எப்போதும் பரபரப்பாக காணப்படும் பேருந்து நிலையம் நகர வளர்ச்சிக்கு ஏற்றவாறு இல்லாமல் கடந்த 40 ஆண்டு காலமாக குறுகிய அளவில் இருப்பதால் தினதோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
இவ்வாறு இருக்கும் பேருந்து நிலையத்தில் பொதுநிகழ்ச்சிகள் என கூறி அரசியல் கட்சிகள் பொதுகூட்டம், கலைநிகழ்ச்சிகள், ஆர்ப்பாட்டம், போரட்டம் என நடத்தப்படுவதால் பேருந்துகள் இயக்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது அது மட்டும் இன்றி பொதுமக்கள் எந்த இடத்தில் எந்த பேருந்து வரும் என்று தெரியாமல் காத்துக்கிடக்கும் சூழல் உருவாகி வருகிறது. பொதுமக்களின் நலனின் கருதி பாலக்கோடு பேருந்து நிலையப் பகுதிகளில் பொது நிகழ்ச்சிக்கு தமிழக அரசு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.gif)


