தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மேக்கலாம்பட்டி பாமாண்டி நகர் கிராமத்தில் ஸ்ரீ மகாகணபதி, ஸ்ரீநவகிரகம், ஶ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோவில் புனரமைக்கப்பட்டு திருநெறி தீந்தமிழ் திருக்குட நன்னீராட்டுப் பெருஞ்சாந்திப்மகா கும்பாபிஷேக விழா கடந்த ஜனவரி 24 ம் தேதி நடைப்பெற்றது.
அதனை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை இன்று நிறைவு பெற்றதையடுத்து, சிறப்பு பூஜை நடைப்பெற்றது, இதையொட்டி இன்று அதிகாலை முதலே ஸ்ரீமுத்துமாரியம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. அம்மன் சிறப்புஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்தவிழாவையொட்டி காலை முதல் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாகுழுவினர் செய்திருந்தனர்.
.gif)


