Type Here to Get Search Results !

தேர்தல் விழிப்புணர்வு குறித்த குறும்படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்து, பார்வையிட்டார்.


பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2024 - ஐ முன்னிட்டு, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அதிநவீன மின்னணு வீடியோ விளம்பர வாகனத்தின் மூலம் தேர்தல் விழிப்புணர்வு குறித்த குறும்படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி. இ.ஆ.ப., அவர்கள் இன்று (22.03.2024) கொடியசைத்து துவக்கி வைத்து, பார்வையிட்டார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2024 - ஐ முன்னிட்டு, வாக்காளர்கள் 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அதிநவீன மின்னணு வீடியோ விளம்பர வாகனத்தின் மூலம் தேர்தல் விழிப்புணர்வு குறித்த குறும்படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி. இ.ஆ.ப., அவர்கள் இன்று (22.03.2024) கொடியசைத்து துவக்கி வைத்து, பார்வையிட்டார்.


பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்ததாவது: பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 நடைபெறுவதை முன்னிட்டு, பொதுமக்கள் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள தேர்தல் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு குறும்படங்கள் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அதிநவீன மின்னணு வீடியோ விளம்பர வாகனத்தின் மூலம் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஒளிபரப்பப்பட உள்ளது.


மேலும், தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த குறும்படங்கள், பொதுமக்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவது குறித்த குறும்படம், மாற்றுத்திறனாளிகள், மகளிர் மற்றும் முதியோர் ஆகியோர்களுக்கான வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்த குறும்படங்கள், ஒளிபரப்பப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு குறும்படங்களை கண்டு தருமபுரி மாவட்டத்தில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவினை உறுதிப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி. இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

 

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள விளம்பர திரையில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு குறும்படங்கள் மற்றும் வாக்காளர்கள் 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்த குறும்படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி. இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, தருமபுரி வட்டாட்சியர் திரு.ஜெயசெல்வன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சு.மோகன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies