தர்மபுரிக்கு அரசு நலதிட்ட உதவிகள் வழங்க வருகை தரும் தமிழக முதல்வருக்கு தர்மபுரி மேற்கு மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என அரூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் அழைப்பு விடுத்தார்.
தர்மபுரி மேற்கு மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நகர செயலாளர் முல்லைரவி தலைமையில் நடைபெற்றது இதில் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் கலந்து கொண்டு பேசுகையில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்க வரும் 11ம் தேதி தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு தர்மபுரி மேற்கு மாவட்ட சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.
தமிழக முதல்வர் வருகையை ஒட்டி மேற்கு மாவட்ட முழுவதும் உள்ள தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் குறிப்பாக பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தொண்டர்கள் கட்டுக்கோப்புடன் தமிழக முதல்வரின் நிகழ்ச்சிக்கு வருகை தர வேண்டும் என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் அரூர் பேரூராட்சி துணைதலைவர் சூர்யாதனபால் பொதுக்குழு உறுப்பினர் கலைவாணிஒன்றிய செயலாளர்கள் ஆர்.வேடம்மாள் இடிடி.செங்கண்ணன் ரத்தினவேல் மாவட்ட விவசாய அணி தலைவர் சி.தென்னரசு தலைமை கழக பேச்சாளர் செந்தாமரைகண்ணன் தலைமை செயற்குழு உறுப்பினர் சென்னகிருஷ்ணன் ஐடிவிங் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கு.தமிழழகன் ஜேசிபி மோகன் நகர துணை செயலாளர் செல்வதயாளன் பொருலாளர் மோகன் மாவட்ட பிரதிநிதிகள் மதியழகன் உள்பட கலந்து கொண்டனர்.