அரூர் விளையாட்டு மைதானத்திற்கு 23.40லட்சம் மதிப்பில் சுற்றுசுவர் கட்ட பூமி பூஜை பேரூராட்சி துணை தலைவர் சூர்யாதனபால் தொடங்கிவைத்தார்.
அரூரில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு தினந்தோறும் காலை மாலை நேரங்களில் நூறுக்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர் இந்த மைதானத்திற்கு பள்ளி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.23.40 லட்சம் மதிப்பில் சுற்றுசுவர் கட்டும் பணிக்கு பூமி பூஜை செய்து தொடங்கிவைத்தார் பேரூராட்சி துணை தலைவர் சூர்யாதனபால், உடன் பேரூர் திமுக செயலாளர் முல்லைரவி, பொறியாளர் ராமலிங்கம், பேரூர் திமுக துணை செயலாளர் செல்வதயாளன், சேதுநாதன் தீபா பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.