தருமபுரிமாவட்டம், மாரண்டஅள்ளி, அருகே கொலசனஅள்ளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியருக்கு ஊர்பொதுமக்கள் சார்பில் பாராட்டு விழா நடைப்பெற்றது.
மார்ச் 6ம் தேதி திருச்சியில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில், பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கொலசனஅள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வம் அவர்களுக்கு சிறந்த தலைமை ஆசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதும் மற்றும் ஊக்க தொகையாக 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து இன்று பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் ஊர்பொதுமக்கள் தலைமை ஆசிரியர் செல்வம் அவர்களுக்கு சால்வை அணிவித்து கெளரவித்தனர். இந்நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.