Type Here to Get Search Results !

பாலக்கோடு நகர பேருந்து நிலையத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து புதிய 10-தகரசீட்டு கடைகள் அமைப்பு- ஆளும் கட்சியினர் என்பதால் தடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி 18வார்டுகளில் சுமார் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். வளர்ந்து வரும் நகரங்களில் பாலக்கோடு ஒன்றாகவும் விளங்கிய வருகிறது. இப்பேருந்து நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு அரசு பேருந்து தனியார் பேருந்து என 200க்கும் மேற்பட்ட பேருந்துகளும் 200ஆட்டோகள் என  பேருந்து நிலையத்திலிருந்து ஓசூர் பெங்களூர் மைசூர் சென்னை பழனி கோவை தர்மபுரி சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நகர மக்கள் புறநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது எப்போதும் பரபரப்பாக காணப்படும்  பேருந்து நிலையம் நகர வளர்ச்சிக்கு ஏற்றவாறு இல்லாமல் கடந்த 40 ஆண்டு காலமாக சிறியதாகவும் குறுகிய அளவில் இருப்பதாலும், பேருந்து நிலையம் நடுவே பாரத  ஸ்டேட் வங்கி இயங்கி வருகிறது. மேலும் பேருந்து நிலையம் முழுவதிலும் நடைபாதை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் தினதோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி விபத்துக்கள், உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. 



இந்த நிலையில் புறநமைக்கப்பட்ட பேருந்து நிலையம் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக நகர பேருந்து நிலையம் பகுதியில் சில தனிநபர் பேருந்து நிலையத்தை ஆக்கிரமிப்பு செய்து ஆலோ பிரிக்ஸ் கற்களை கொண்டு கட்டிடம் கட்டி மேற்கூரை தகர சீட்டுகள் அமைத்து வருகின்றனர். மேலும் பேரூராட்சி நிர்வாகத்திடம் இதுகுறித்து தகவல் கேட்கும் பட்சத்தில் கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், அரசுக்கு தெரிவித்து முறைபடி கட்டிடம் கட்டுவதாகவும், கடந்த 25ஆண்டுகளாக அப்பகுதியில் நடைபாதை கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றார்கள். 


அதனால் பேருந்து நிலையம் புறநானக்கப்பட்ட போது கடைகள் அகற்றப்பட்டு பணிகள் மேற்கொள்ளபட்ட நிலையில் தற்போது அவர்களாகவே முன்வந்து கடைகள் கட்டி வருவதாக தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies