நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் வக்கில் செந்தில் மாவட்ட கவுன்சிலர் சரவணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், நிர்வாகி சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கண்டன உரையை துவக்கி வைத்து பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தமிழ்நாட்டில் போதை பொருள் விற்பனை எங்கு பார்த்தாலும் நடைபெற்று வருகிறது. மொத்த போதை பொருள் விற்பனை இடமாக தமிழ்நாடு மாறி இருக்கிறது. தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், அதனால் இளைஞர்கள் சீரழிந்து வருவதாகவும், போதை பொருள் நடமாட்டத்தை திமுக அரசு உடனடியாக தடுக்க வேண்டும் என்றும் பேசிய அவர்.
தொடர்ந்து காப்பாற்றுவோம், காப்பாற்றுவோம் கஞ்சா, போதை பிடியிலிருந்து பள்ளி மாணவர்களை காப்பாற்றுவோம், கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம் போதைப்பொருள் மாபியாவோடு தொடர்பில் உள்ள ஆளும் திமுக அரசை கண்டிக்கிறோம், என்னாச்சு, என்னாச்சு நீட் தேர்வு ரத்து என்னாச்சு. உள்ளிட்ட கண்டன கோஷங்கள் எழுப்பி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கவுன்சிலர் ரமேஷ்குமார், ஒன்றிய துணை செயலாளர் அண்ணாமலை, கிளை செயலாளர்கள் விவேக், ரமேஷ், மல்லேசன், ஜெயராமன், நகர துனைசெயலாளர் மணி, நகர இணை செயலாளர் எஸ்தர் தகவல் தொழில்நுட்ப நகர செயலார் வெங்கடேன், ஐ.டி.விங்க் நிர்வாகி அரவிந்தன், துணை கிளை செயலாளர் தேவராஜ், மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
.gif)

