தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிமேம்பாட்டு நிதிமூலம் 1 கோடி 64 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆய்வகம், கழிவறை மற்றும் கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாரண்டஅள்ளி பேருராட்சி தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். பள்ளி வளாகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டிடபணியினை துவக்கி வைத்து இனிப்பு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தங்கதமிழ்செல்வன், பேரூராட்சி கவுன்சிலர்கள், திமுக முன்னாள் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பி.எல்.ஆர்.ரவி. திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மகேஸ்குமார், ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.