Type Here to Get Search Results !

நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டத்தின் மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பொதுமக்கள் இ-சேவை மையம் மற்றும் Citizen Portal வழியாக விண்ணப்பிக்கலாம்.


தருமபுரி மாவட்டத்தில் நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டத்தின் மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பொதுமக்கள் இ-சேவை மையம் மற்றும் Citizen Portal (https:/tamilnilam.tn.gov.in/citizen) வழியாக விண்ணப்பிக்கலாம்.


தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆப., அவர்கள் தகவல் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: ”நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டம்” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 04.03.2024 அன்று துவக்கி வைக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி வட்டம், நல்லம்பள்ளி வட்டம், பென்னாகரம் வட்டம், காரிமங்கலம் வட்டம், அரூர் வட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் (பாலக்கோடு வட்டம் தவிர) ஆகிய வட்டங்களில் இந்த நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டத்தின் மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பொதுமக்கள் இ-சேவை மையம் மற்றும் Citizen Portal (https:/tamilnilam.tn.gov.in/citizen) வழியாக விண்ணப்பிக்கலாம்.


அதனடிப்படையில், நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் இணைய வழியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, நத்தம் பட்டா வழங்கப்படும். மேலும், கிராம நத்தம் பகுதிகளுக்கான நத்தம் மனை பட்டாக்களை (https://eservices.tn.gov.in) என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். “நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டம்” நடைமுறைப்படுத்தப்பட்ட வட்டங்களில் இ-சேவை மையம் மற்றும் Citizen Portal வாயிலாக பெறப்படும் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies