Type Here to Get Search Results !

கொத்ததடிமைத்தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொத்ததடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று (09.02.2024) நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் கொத்ததடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியான இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத்தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால், கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்திற்கொண்டு, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர் முறை எந்தத் தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளங்கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன் என்றும், எந்தத் தொழிற்சாலையிலும் தொழிலாளர்களுக்கு முன்பணம் கொடுத்து பணியமர்த்துவதைத் தவிர்க்க வலியுறுத்துவேன் என்றும், கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்விற்காகப் பணியாற்றுவேன் என்றும், இந்திய அரசமைப்புச் சட்டம் வகைசெய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு, கொத்தடிமைத் தொழிலாளர்முறை ஒழிப்புச் சட்டத்ததைச் சீரிய முறையில் செயற்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயற்படுவேன் என்றும் நான் உளமார உறுதி கூறுகிறேன்.” என்ற உறுதிமொழியினை வாசிக்க அரசுத்துறை அலுவலர்கள் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.பழனிதேவி, தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சையது ஹமீத், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (சபாதி) திரு.சி.முத்து, தமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.ஆ.செல்வம், தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் திரு.ஞானசேகர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies