தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், கூரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா வட்டார வளர்ச்சி கல்வி அலுவலர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் பாலவாடி, பொம்மசமுத்திரம் பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் கூரம்பட்டி பள்ளியின் தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு, ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று மாணவ, மாணவிகளின் நடன நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

