Type Here to Get Search Results !

தருமபுரியில் தொல்லியல் களப் பயிற்சி நடைபெற்றது.


தர்மபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரியும், யாக்கை மரபு அறக்கட்டளை ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்படுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்  செய்துள்ளனர். இதன்படி வரும் காலங்களில் இக்கல்லூரி கல்லூரி மாணவர்களுக்கு தேவையான தொல்லியல், வரலாறு சார்ந்த பயிற்சி பட்டறைகள் நடத்துவதற்கும், களப்பயணங்கள் மேற்கொள்வதற்கும் இவ்வொப்பந்தம் வழிவகைச் செய்கிறது. 

மேலும் இப்பகுதியில் உள்ள மரபுச் சின்னங்களைப் பாதுகாப்பது, சுத்தம் செய்வது மற்றும் அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுவது என்று முடிவு செய்துள்ளனர்.  நேற்று கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரியின் சேர்மன் DNC மணிவண்ணன், திரு. நிர்வாக அலுவலர் விக்ரமன், முதல்வர் பாலசுந்தரம், முனைவர் திரு சிவகுமார், திரு சந்திரன்,  பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் யாக்கை மரபு அறக்கட்டளை சார்பில் திரு சுதாகர் நல்லியப்பன், திரு குமரவேல் இராமசாமி, திரு அருண் ராஜா மோகன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தகடூர் நாட்டு வரலாற்று சிறப்பு என்னும் தலைப்பில் குமரவேல் இராமசாமி உரையாற்றினார். 


நிகழ்வின் ஒருபகுதியாக மாணவர்கள் கள ஆய்வுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தர்மபுரி மாவட்டம் பங்குநத்தம் பெருங்கற்படை ஈமச்சின்னங்களை மாணவர்கள் பார்வையிட்டனர். அங்கு பெருங்கற்படை ஈமச்சின்னங்கள் குறித்து திரு அருண் ராஜா மோகன் அவர்கள் விளக்கம் அளித்தார். பின்னர் தருமபுரியில் நல்லம்பள்ளி அருகேயுள்ள சிவாடி என்னும் ஊரில் பதிவான இரண்டாம் இராஜராஜ சோழனின் கல்வெட்டையும் மாணவர்கள் பார்வையிட்டனர். 


அங்கு கல்வெட்டினைப் படியெடுப்பது, படிப்பது குறித்தான கள பயிற்சியும் யாக்கை மரபு அறக்கட்டளையின் சார்பில் திரு. சுதாகர் நல்லியப்பன் வழங்கினார். கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் என எழுபது நபர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies