Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID – Unique Disability ID) பதிவேற்றம் செய்திட ஆவணங்கள் பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.


மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம்  தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் (UDID – Unique Disability ID)  தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பதிவேற்றம் செய்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இனி வருங்காலங்களில் அரசின் நலத்திட்டங்கள் பெறுவதற்கு UDID அட்டை கட்டாயமாக்கப்படவுள்ளது.


எனவே தருமபுரி மாவட்டத்தில் இதுநாள் வரை UDID அட்டை பெறப்படாத மாற்றுத்திறனாளிகளிடமிருந்து ருனுஐனு அட்டை பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் பெற்று கணிணியில் பதிவேற்றம் செய்திடவும்மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை தவிர்க்;கும் பொருட்டும் அவர்கள்  வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் கீழ்காணும் விவரப்படி சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

.

எண்

நாள்

வட்டாரம்

சிறப்பு முகாம் நடைபெறும் இடம்

நேரம்

1

31.01.2024

ஏரியூர்

வட்டார வளர்ச்சி அலுவலகங்கள்

காலை 10.00 மணி முதல்

பகல் 01.00 வரை

2

பென்னாகரம்

3

01.02.2024

காரிமங்கலம்

4

பாலக்கோடு

5

02.02.2024

அரூர்

6

 

மொரப்பூர்

7

05.02.2024

பாப்பிரெட்டிபட்டி

8

கடத்தூர்

9

06.02.2024

நல்லம்பள்ளி

10

தருமபுரி

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், தருமபுரி

எனவே தருமபுரி மாவட்டத்தில் இதுநாள் வரை UDID அட்டை பெறப்படாத மாற்றுத்திறனாளிகள் மேற்காணும் சிறப்பு முகாம்களில்  மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (மருத்துவச்சான்று உட்பட), ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் மாற்றுத்திறனாளி நபரின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர் மட்டும் (மாற்றுத்திறனாளிகள் வரத்தேவையில்லைகலந்து கொண்டு  பயனடையலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884