Type Here to Get Search Results !

நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கும் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களை ஆய்வு செய்தார் தருமபுரி MLA.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், பாளையம்புதூர் ஊராட்சி, தொம்பரகாம்பட்டி கூட்டுறவு நியாய விலை கடையில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் ஆய்வு மேற்கொண்டார். நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கும் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களை ஆய்வு செய்தார். மேற்கண்ட பொருட்களை சரியான அளவில் வழங்குகிறார்களா என்று பொதுமக்களிடம் கேட்டறிந்தார். 

சில குடும்ப அட்டைதாரர்கள் பருப்பு வழங்கவில்லை என்று தெரிவித்தனர். உடனடியாக துறை தொடர்புடைய அலுவலருக்கு தகவல் தெரிவித்து, உடனடியாக பருப்பை வரவைத்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சீரான முறையில் உடனடியாக பொருட்களை வழங்க வழிவகை செய்தார். இந்நிகழ்வில், பாமக இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் முனிவேல் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies