கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சென்னப்ப நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருடைய மகன் சந்தோஷ்குமார் வயது 22. இவர் டிப்ளமோ முடித்துவிட்டு போச்சம்பள்ளி தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இவருடைய தந்தை சுரேஷ் உயிரிழந்த நிலையில் தந்தையின் அஸ்தியை கரைக்க ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு தனது உறவினர்களுடன் வந்துள்ளார்.
அப்போது ஆலம்பாடி பரிசல் துறை பகுதியில் கட்சியை கரைப்பதற்காக காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒகேனக்கல் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினர் சந்தோஷ் குமாரை தேடிய நிலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு சந்தோஷ் குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
பின்பு உடலை கைப்பற்றிய ஒகேனக்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பென்னாகரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தனது தந்தை இறந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் அஸ்தியை கரைக்க காவிரி ஆற்றிற்கு வந்த இளைஞர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
.gif)

.jpg)