தருமபுரி சட்டமன்றத் தொகுதி, நல்லம்பள்ளி வட்டம், தொப்பூர் மற்றும் சேசம்பட்டி கிராமங்களில் சிறப்பு சுருக்க திருத்தம் 2024-ல் பெறப்பட்ட வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்த படிவங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட வாக்காளர் வீடுகளுக்கே சென்று மனுக்களின் மீது தருமபுரி வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் ஆணையர் மரு.K.S.பழனிசாமி இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு (Super Check ) மேற்கொண்டார்கள்.
தருமபுரி மாவட்டத்தில், சிறப்பு சுருக்க திருத்தம் 2024-ல் பெறப்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/ நீக்கல்/ திருத்தல் தொடர்பான படிவங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், தருமபுரி சட்டமன்றத் தொகுதி, நல்லம்பள்ளி வட்டம், தொப்பூர் மற்றும் சேசம்பட்டி கிராமங்களில் புதியதாக பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்த படிவங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட வாக்காளர் வீடுகளுக்கே சென்று மனுக்களின் மீது தருமபுரி வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் ஆணையர் மரு.K.S.பழனிசாமி இ.ஆ.ப., அவர்கள் இன்று (12.01.2024) கள ஆய்வு (Super Check ) மேற்கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து, தருமபுரி வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் ஆணையர் மரு.K.S.பழனிசாமி இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), வருவாய் கோட்டாட்சியர், தனி வட்டாட்சியர் (தேர்தல்) அனைத்து வட்டாட்சியர்கள், மற்றும் அனைத்து தேர்தல் துணை வட்டாட்சியர்களுடன் தேர்தல் இணையதளம் வாயிலாக (ERONET 2.0) பெயர் சேர்த்தல், நீக்கல்,முகவரி திருத்தம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.டி.ஆர்.கீதாராணி, தனி வட்டாட்சியர் (தேர்தல்கள்) திரு. உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.