பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் பள்ளிக்கல்வித்துறை தற்காப்பு பயிற்சியை மாணவிகளுக்கு வழங்கி வருகிறது. ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகள் சிலம்பம் பயிற்சியில் சிலம்ப பயிற்சியாளர் தமிழர் தற்காப்பு பயிற்சி பள்ளி ஆசிரியர் சண்முகம் பயிற்சி அளித்து வருகிறார். மாணவிகள் சிறப்பான முறையில் தற்காப்பு பயிற்சியை கற்று தேர்ச்சி அடைந்து வருகிறார்கள்.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி 12 இளைஞர்கள் எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் கருத்துக்கள் எடுத்துக் கூறப்பட்டது. விவேகானந்தரின் நற்கருத்துகளை வாழ்க்கையில் கடைபிடித்து மேன்மையடைய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழர் திருவிழாவான பொங்கல் திருவிழாவில் சிறப்புகள் மற்றும் பொங்கல் விழாவில் நோக்கம் பற்றி மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. போகிப் பண்டிகையின் போது சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் பொருள்கள் எரிப்பதை தவிர்க்க வேண்டும் என மாணவர்களையும், பெற்றோர்களையும் பொது மக்களையும் கேட்டுக்கொள்ளப்பட்டது. பிறகு பள்ளியில் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
பொங்கல் திருநாளில் உழவர்களுக்கும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக மாணவர்களிடையே பொங்கல் விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மா.பழனி செய்திருந்தார். விழாவில் ஆசிரியர்கள் வளர்மதி, பழனிச்செல்வி, கல்பனா, திலகவதி, ரேக்கா, சத்துணவு அமைப்பாளர் அம்பிகா, சமையலர்கள், மாணவர்கள் ஊர் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.