Type Here to Get Search Results !

2024-2025-ம் கல்வியாண்டிற்கு தொழிற்பள்ளிகள் துவங்குவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல் இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது. 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகார நீட்டிப்பு, கூடுதல் தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.

02.01.2024 முதல் 29.02.2024 நள்ளிரவு 11:59 மணி முடிய www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலும் தெரிந்து கொள்ளலாம். மற்றும் சேலத்தில் உள்ள மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலகத்தையும், அலுவலக தொலைபேசி எண் 0427-2900142 என்ற எண்ணிலும், மின்னஞ்சல் முகவரி : rjdtslm@gmail.com என்ற முகவரி வாயிலாகவும் தொடர்பு கொண்டும் விவரங்களை பெறலாம், .என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்கள். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies