அரூர் டிசம்பர் 10 வேளாண்மை துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டம் அட்மா திட்டத்தில் அரூர் வட்டாரம் H. கோபிநாதம்பட்டி கிராமத்தில் கிராம வேளாண் முன்னேற்ற குழு விவசாயிகள் பயிற்சி அரூர் வேளாண்மை துறை வேளாண்மை அலுவலர் திரு குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு வேளாண்மை துறை மாநில அரசு மற்றும் மத்திய அரசு மானிய திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை துறை உதவி அலுவலர் திரு செஞ்சுரியன் அவர்கள் கலந்து கொண்டு கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் கலைஞர் கிராமத்தில் தோட்டக்கலைத் துறையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய விவரங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள்.
இந்நிகழ்ச்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் திரு செந்தில்குமார் அவர்கள் கலந்து கொண்டு அட்மா திட்ட செயல்பாடுகள் பற்றியும் உழவன் செயலி பயன்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் 25க்கும் மேற்பட்ட முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.