தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி பேரூராட்சிக்குட்பட்ட பைபாஸ் ரோடு,புது தெரு, பாலசுப்பிரமணியம் தெரு,சந்தை வீதி, ஆறுமுக உடையார் தெரு, கடைத்தெரு ஆகிய பகுதிகள் அடங்கிய 3 நியாய விலை கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு வழங்கும் செங்கரும்பு, சர்க்கரை, அரிசி, வேட்டி சேலை மற்றும் ரொக்கப்பணம் 1000 ரூபாய் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பினை மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் எம்.ஏ. வெங்கடேசன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் இராணி அகியோர் பொது மக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள், கார்த்திகேயன், ரீனா குழந்தைவேலு, அபிராமி காந்தி, வெங்கடேசன், கீதா வடிவேல் சுகந்திரமேஷ், பொருளாளர் ஆறுமுகம்,ஸ்டார் பாய்,வசிம்,சத்திஸ் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.