தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் 100 வகை மரங்கள் நிறைந்த தன்னிகரற்ற பசுமைப்பள்ளி அமைந்துள்ள பிக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தருமபுரி இயற்கையைக் காப்போம் தலைமையகம் ஒருங்கிணைப்பில் கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கழிவு மேலாண்மை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக அமைந்தது திடக்கழிவு மேலாண்மையில் தருமபுரி மாவட்டத்தில் சிறப்பான பங்களிப்பு செய்து வரும் திரு.சந்தோஷ்குமார் (நிறுவனர்: Skyline industries) அவர்களது உரையும், உறுதிமொழியும் பள்ளி சார்பில் சீனித்துளசி மரக்கன்று அன்பளிப்பாக அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் நினைவாக பலாசு மரக்கன்று நடவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியின் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இயற்கை காப்போம் தலைமையகத்தின் நிறுவனர் தாமோதரன் மற்றும் இருபால் ஆசிரியர்கள், சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.