வெல்லும் சனநாயகம் மாநாட்டிற்கு விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவரிடம் நிதி வழங்கிய தருமபுரி கிழக்கு மாவட்ட விசிகவினர். ஜனவரி 26ல் திருச்சியில் நடைபெறும் வெல்லும் சனநாயகம் மாநாட்டிற்கு தருமபுரி கிழக்கு மாவட்டம் சார்பில் டாஸ்மாக் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநிலதுணை செயலாளர் இரா.ஆறுமுகம் ஏற்பாட்டில் தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன் சர்மா தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களிடம் வெல்லும் சனநாயகம் மாநாட்டு நிதியாக 1 லட்சம் வழங்கினர்.
உடன் மண்டல செயலாளர் மின்னல்சக்தி டாஸ்மாக் தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்டசெயலாளர் கண்ணன் கணபதி நிர்வாகிகள் ஜெய்சந்த் ஏழுமலை சதீஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.