தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் சின்னவத்தலாபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவி சௌபரணி இவர் பென்னாகரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயில்கிறார். இவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு தர்மபுரியில் உள்ள கருணை இல்லம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் காப்பதற்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
இந்நிகழ்வில் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் கூத்தப்பாடி மா.பழனி, கவிஞர் முருகேசன். கவிமணி முருகேசன், உடன் இருந்தனர்.இந்த மாணவி மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் 29 விருதுகளை பெற்றுள்ளார் மற்றும் தான் பெற்ற பரிசுத்தொகை 96ஆயிரம் ரூபாய் அனைத்தும் பொது நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.