தருமபுரி மாவட்டம் அருர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவி, தமிழ்த் துறையை சேர்ந்த ரம்யா, மாநில குடியரசு தினவிழா அணிவகுப்பில் சீருடையுடன் கலந்து கொண்டுள்ளார். மாநில அளவில் 120 மாணவிகளை கொண்ட முகாமில் பெரியார் பல்கலைக்கழகம் சார்பாக 4 மாணவிகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முகாமில் கலந்து கொள்ள ஆறு மாத கடுமையான பயிற்சி பெற்றார் என்பதும் பாராட்டுக்குரியது.