தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திலுள்ள காட்டம்பட்டிஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 75 வது குடியரசு தினவிழா, ஒன்றிய கவுன்சிலர் முத்தப்பன் தலைமையில் கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் பெஞ்சமின் அனணவரையும் வரவேற்று பேசினார். ஊர் கவுண்டர் சின்னசாமி, மந்திரி கவுண்டர் பெரியசாமி, கோல்கவுண்டர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் முத்தப்பன் தேசிய கொடியை ஏற்றி 75வது குடியரசு தின விழா குறித்து சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து குடியரசு தினவிழா கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. இதையடுத்து பேச்சுபோட்டி, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஊர் பொதுமக்கள், பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புக்கள் வழங்கப்பட்டது.
.gif)

