தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் சின்னப்பள்ளத்தூர் அரசு பள்ளியில் தூய்மை பணிகள் திங்கட்கிழமை முதல் மூன்று நாட்கள் நடைபெற்றது. இத்திட்டத்தின்படி பள்ளி வளாகத் தூய்மை, வகுப்பறை தூய்மை, கழிப்பறை தூய்மை, குடிநீர்த் தொட்டி தூய்மை, பள்ளி வளாகத்தை பசுமையாக்க மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பது, காய்கறித் தோட்டம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது. இத்தூய்மை பணியில் ஊர் மக்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்பது பற்றி பொதுமக்களிடமும், மாணவர்களிடமும் தலைமை ஆசிரியர் மா. பழனி விளக்கி பேசினார். சுத்தமான வாழ்வே சுகத்திற்கு ஆதாரம் என்பதை அனைவரும் உணர்ந்து நம்மையும் நாம் சார்ந்த இடத்தையும் சுற்றுப்புற சூழலையும் சுகாதாரமாக வைத்துக் கொள்வது அவசியம் என்றார்.