தமிழக அரசு தேர்தல் காலத்தில் கூறியபடி போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பணிமனை ,பென்னாகரம் பணிமனையில்யில் தற்காலிக ஓட்டுநர் நடத்துனர்களைக் கொண்டு அளவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது, தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை முடக்கும் வகையில் தற்காலிக ஓட்டுநர் நடத்துனர்களை நியமித்துள்ளது.
தற்காலிக பணியாளர்களை ஓட்டுநர்களை நியமித்து பேருந்துகளை இயக்கும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பென்னாகரம் அரசு போக்குவரத்து கழக முன்பு தமிழக அரசை கண்டித்தும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். . இந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற சிஐடியு தொழிலாளர்கள் அதிமுக தொழிலாளர்கள் உட்பட 50 க்கும் மேற்பட்டோரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் விடியல் அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.