தற்போது கோடை வெயில் அதிகரித்து அனல் காற்று வீசி வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் குப்பை கிடங்கில் இருந்த தீ காற்றில் பரவி அருகிலிருந்த சின்னசாமிக்கு சொந்தமான விவசாய நிலத்திற்க்கு பரவியது. இதில் 7 வருடமாக அவர் வளர்த்து வந்த விலை உயர்ந்த மரங்களான சந்தனம், ரோஸ் உட், செம்மரம், தேக்கு உள்ளிட்ட சுமார் 10 இலட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் மற்றும் பைப்புகள் தீயில் கருகி நாசமாயின. தகவலறிந்த பாலக்கோடு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து விவசாயி கண்ணீர் மல்க கூறியதாவது, கடுமையான வறட்சியிலும் பல இலட்சம் ரூபாய் செலவழித்து ஆழ்துளை கிணறு அமைத்து விலை உயர்ந்த மரங்களை 7 வருடமாக சொட்டு நீர் மூலம் வளர்த்து வந்தேன், ஆனால் பாலக்கோடு பேரூராட்சி குப்பை கிடங்கால் 2 வது முறையாக ஏற்பட்ட தீ விபத்தால் பல இலட்சம் மதிப்பிலான விலையுயர்ந்த மரங்கள் தீயில் கருகி நாசமாகின.
தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்கவும், குப்பை கிடங்கில் இருந்து அடிக்கடி ஏற்படும் தீ பரவாமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.