தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் ஜெர்தலாவ் ஊராட்சி மன்றத்திலுள்ள திம்மம்பட்டி சாலை மற்றும் காரிமங்கலம் சாலை செல்லியம்மன் கோயில் வரை நெடுஞ்சாலை ஓரம் உள்ள புளிய மரங்களின் இந்த ஆண்டின் மகசூல் பெறும் உரிமைக்கான ஏலம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயமாலா முன்னிலையிலும், ஊராட்சி மன்ற தலைவர் முத்துமணி ஆனந்தன் தலைமையிலும் நடைப்பெற்றது.
இதில் 79 ஆயிரம் ரூபாய்க்கு மாக்கன் கொட்டாயை சேர்ந்த மகேந்திரன் என்பவர் அதிக விலை கேட்டதை அடுத்து புளியமரம் மகசூல் உரிமை அவருக்கு ஒதுக்கப்பட்டது. இந்த ஏலத்தில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.